சங்கீதங்கள் 133:1-3 IRVTam - Bible AI

1இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்செய்கிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?

2அது ஆரோனுடைய தலையின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்திற்கும்,

3எர்மோன்மேலும், சீயோன் மலைகள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாக இருக்கிறது; அங்கே யெகோவா என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் வாழ்வையும் கட்டளையிடுகிறார்.

le>