சங்கீதம் 58:1-10 IRVTam - Bible AI

1மவுனமாக இருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாக நீதியைப் பேசுவீர்களோ?

2மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்;

3துன்மார்க்கர்கள் கர்ப்பத்தில் தோன்றியதுமுதல் முறைதவறுகிறார்கள்;

4பாம்பின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.

5பாம்பாட்டிகள் விநோதமாக ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்தைக் கேட்காதபடிக்குத் தன்னுடைய காதை அடைக்கிற செவிட்டுவிரியனைப்போல் இருக்கிறார்கள்.

6தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்;

7கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்;

8கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக;

9முள் நெருப்பினால் உங்களுடைய பானைகளில் சூடேறுவதற்கு முன்பே

10பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்;